வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் தொடக்கம்

77பார்த்தது
தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதிநாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் அலுவலர்களும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்காளர்களுக்கு முதல் பூத் சிலிப் விநியோகிக்கப்படுகிறது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் ஆறு சட்டமன்ற தொகுகள் உள்ளன. இதில் 16 லட்சத்து 23 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் ஆயிரத்து 873 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வாக்ககாளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கியது மானாமதுரை(தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் வீடு வீடாக பூத் சிலிப் வழங்க உள்ளனர். பூத் சிலிப் வழங்கும் போது அனைவருக்கும் வழங்க வேண்டும், யாருக்கும் விடுபட கூடாது என தாசில்தார் தெரிவித்தார்.

டேக்ஸ் :