மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் மற்ற தினங்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இதே போல் தமிழ், ஆங்கில புத்தாண்டு, ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு பூஜை நடைபெறும். இந்நிலையில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே மடப்புரம் கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர்கள். பக்தர்கள் சிரமமின்றி வரிசையாக சென்று தரிசனம் செய்யும் வகையில் கோவிலில் தடுப்பு கட்டைகள் மூலம் பாதை அமைக்கப்பட்டிருந்தது. காலை முதல் மாலை சுமார் 5. மணி வர பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி