சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரபல தனியார் குளோபல் மருத்துவமனை மருத்துவர் குமரேசன் இவரது நண்பர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவர் டாக்டரின் மருத்துவமனைக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இளம் பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளர் அந்த மருத்துவமனையில் பணம் முறைகேடு நடந்துள்ளது இதை அடுத்து சில மாதங்களுக்கு முன் அந்த பெண்ணை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது உடனே ரியல் எஸ்டேட் நன்பர் டாக்டரை தொடர்பு கொண்டு எனது அறியக்குடியில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு பெண்ணை வரச் சொல்லி உள்ளேன் இந்தப் பிரச்சனை குறித்து பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என மருத்துவரிடம் கூறி வரவழைத்துள்ளார் அங்கு சென்ற டாக்டர் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது ரியல் எஸ்டேட் நண்பர் வெளியே சென்று வருகிறேன் என கூறி சென்றுள்ளார் அப்போது அவரின் ஏற்பாட்டில் தயாராக இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளே புகுந்து அவரை தாக்கியுள்ளனர் ஒரு கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் இந்தப் பெண்ணுடன் இருக்கும் வீடியோ எடுத்து வைத்துள்ளோம் என்றும் அதை சமூக வலைத்தளங்களில் பரவி விடுவோம் என மிரட்டியதால் இது தொடர்பாக அந்த டாக்டர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி டிஎஸ்பி தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தற்போது இதில் பிரேம்குமார், துரைப்பாண்டி, ராமநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.