இளங்குடி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இளங்குடியில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்று கிராம சபை கூட்டம் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் மேற்பார்வையில் இளங்குடி பஞ்சாயத்து தலைவர் ஜோசப் தலைமையில் இன்று நடைபெற்றது அப்பொழுது கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏழு பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 103 பேர் பங்கேற்றதாக மாவட்ட ஆட்சியரிடம் கூறியதாகவும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது இது குறித்து கேள்வி எழுப்பிய கிராம மக்களை ஊராட்சி மன்ற தலைவர் அவருக்கு ஆதரவான பெண்களை விட்டு காவல்துறையினர் முன்பிலேயே அடிக்கக்கூறியதால்
பெரும் வாக்குவாதம் கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி