சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்று 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது அப்பொழுது முதலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அவருக்கு வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டது அதன் பின்பு மறு வாக்கு எண்ணிக்கையில் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது இருவருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கியதால் தேவி மாங்குடி மதுரை உயர்நீதி மன்றத்தை நாடி முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் பெற்ற தன்னையே சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடுத்தார் மதுரை உயர்நீதிமன்றம் தேவி மாங்குடி வெற்றி செல்லும் என்று அறிவித்தது தேவி மாங்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார் அதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி ஐயப்பன் உச்ச நீதிமன்றத்தை நாடினார் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை சிவகங்கை நீதிமன்றத்தை நாடி பரிகாரம் பெறலாம் என்று உத்தரவிட்டது அதனை தொடர்ந்து பிரியதர்ஷினி சிவகங்கை நீதிமன்றத்தின் நாடினார் அவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்தது அதனை தொடர்ந்து இன்று சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார்.