சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேவ் எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் கண் மருத்துவமனையில் 40 வயதுக்கு உட்பட்டவருக்கு இலவசமாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அவர்களுக்கு சர்க்கரையின் அளவு கண்டறிதல், கண் நீர் அழுத்தம், விழித்திரை பரிசோதனைகள் செய்து மருத்துவமனை மருத்துவர் பிரியா சிவதானு ஆலோசனைகளை வழங்கினார். இந்த முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் சிவதானு செய்திருந்தார் கலந்து கொண்ட பயனாளிகள் இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது என கூறினர்.