அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

62பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இரண்டு நாட்களாக பெய்த மழையினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வைத்தியலிங்கபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளில் இருந்து சரியான கழிவுநீர் வெளியேற முடியாததால் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு மழை பெய்தவுடன் செல்ல வழி இல்லாமல் அப்ப பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாயினர். மேலும் ஆங்காங்கே தேங்கி உள்ள பாதாள சாக்கடை கழிவு நீரால் சுகாதாரத கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில்
இப்பகுதி மக்கள் மாநகராட்சியை முற்றுகை இட போவதாக போராட்ட அறிவிப்பு செய்தவுடன் விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்து இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறி சென்றனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி