சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சேவா சங்கத்தினர் நடத்திய 13 ஆம் ஆண்டு 1008 பால்குட திருவிழா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் செவ்வாய் என்று சஷ்டி சேவ சங்கத்தினரால் 1008 பால்குடம் நடைபெறும் அம்மன் அவதரித்த நாளை கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் இந்த சங்கத்தினர் காரைக்குடி முத்தாலம்மன் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் வரை நகரின் பல்வேறு பகுதியில் இருந்து 1008 பால்குடம் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தினர் இந்த பால்குடத்தில் 1008 பேர் கலந்து கொண்டு அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர் பால்குடத்தை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.