சிங்கப்பூர் அமைச்சர் பழனியில் தரிசனம்

52பார்த்தது
சிங்கப்பூர் அமைச்சர் பழனியில் தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சிங்கப்பூர் உள்துறை, சட்டத்துறை அமைச்சர் சண்முகம், நேற்று (மே 29) சுவாமி தரிசனம் செய்தார். ஹெலிகாப்டரில் பழனி வந்த அவர் ரோப்கார் வாயிலாக முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த உச்சிகால பூஜையில் கலந்துகொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் சில அதிகாரிகளுடன் வருகை தந்திருந்தனர். அதன்பின் ரோப்கார் வாயிலாக அடிவாரம் வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திரும்பினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி