கர்நாடக மாநிலம், பெங்களூருவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது ஷூ-வை தொண்டரை கழற்ற சொன்ன சம்பவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கையில் தேசியக் கொடியுடன் ஷூ கழற்றிய காங்கிரஸ் தொண்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொண்டரை ஷூ கழற்ற சொன்ன சித்தராமையாவிற்கு எதிராகவும் பாஜகவினர் கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.