ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் பகுதியில் இயங்கிவரும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் நரசபுரம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (20) என்பவர் விடுதியில் தங்கிக்கொண்டு பி.டெக் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதே போல அனந்தபூர் மாவட்டம் வடிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹொதிவாலி பள்ளி அகிலா (19) என்ற மாணவி பெண்கள் விடுதியில் தங்கியிருந்த நிலையில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.