அமெரிக்காவின் கொலராடோ உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். சுப்ரீம் கோர்ட்டின் ஏழாவது மாடிக்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அனைவரும் அலறி அடித்து ஓடினர். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். பலத்த சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு நீதிமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.