ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் கடந்த 2022 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. ஜெனிபருக்கு பென் அப்லெக் 4வது கணவர் ஆவார்.