சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

68பார்த்தது
சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
மலேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியின் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. வெள்ளியன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 21-11, 21-8 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ ஜிட்டிங் மற்றும் ரென் சியாங்யு ஜோடியை தோற்கடித்தனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா-தனிஷா க்ராஸ்டோ ஜோடி 15-21, 13-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ரின் இவானாகா-கி நகானிஷி ஜோடியிடம் தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்தி