UTS செயலியில் இனி வீட்டிலிருந்தே ரயில் டிக்கெட் எடுக்கலாம்

55பார்த்தது
UTS செயலியில் இனி வீட்டிலிருந்தே ரயில் டிக்கெட் எடுக்கலாம்
யூடிஎஸ் (UTS) மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரெயிகளுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது. இருந்த போதிலும் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் யுடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you