சாந்தன் தாயகம் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்படும்

84பார்த்தது
சாந்தன் தாயகம் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்படும்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாந்தன் விடுதலை செய்யப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து உடல்நிலை சரியில்லாத தனது தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கை அனுப்ப வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணையில், சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தாயை கவனித்துக் கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு பிப்ரவரி.29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி