பாலியல் குற்றங்கள் - தமிழ்நாடு அரசின் புதிய இணையதளம்

82பார்த்தது
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான www.pocsoportal.tn.gov.in என்ற இணையதளம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலியல் வழக்குகளை தனியாக கவனித்து அதன் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை தாமதம் இன்றி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் குறித்த விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி