தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை 2023ஆம் ஆண்டு முத்துப்பாண்டி என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (டிச., 19) முத்துப்பாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.