செந்தில் பாலாஜி வழக்கு.. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிர்ச்சி தகவல்!

1906பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு.. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிர்ச்சி தகவல்!
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேருக்கு தொடர்பு இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 2011 - 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 2017-ல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது. தற்போது, கூடுதல் குற்றபத்திரிக்கையில் சுமார் 900 பேர் வரை சேர்த்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி