மோகன்லால் 360வது படம்.. படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

61பார்த்தது
பிரபல நடிகர் மோகன்லாலின் 360-வது படத்தை, 'சவுதி வெள்ளக்கா' பட இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் வீடியோவை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுமென இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தை ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.