ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. கன்ஹையலால் பைர்வா (26) என்பவர் நேற்று (ஆக., 05) காலை தனது நண்பர்களுடன் பெகன் சப்-டிவிஷன் பகுதியில் உள்ள மேனல் நீர்வீழ்ச்சிக்கு வந்தார். அவர்கள் அனைவரும் குளிக்கும் போது செல்ஃபி எடுத்தனர். அப்போது அருவியில் கன்ஹையலால் பைர்வா தவறி விழுந்தார். இதில் நண்பர்கள் கண்முன்னே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.