கோயம்புத்தூரில் இன்று (ஜூலை 29) செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “சீமான், அண்ணாமலை கட்டித்தழுவியது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. சீமான் பாஜக குறித்தும், அண்ணாமலை நாதக குறித்தும் விமர்சித்து இருந்தாலும் இருவரும் நேரில் கட்டித்தழுவியது நல்ல விஷயம்” என்றார். மேலும், “நாதக உடன் சேர்ந்து பயணிப்பீர்களா?” என செய்தியாளர் கேட்டதற்கு, “பாஜக அரசியல் நாகரிகம் தெரிந்த கட்சி அதனால் அனைவரையும் அரவணைக்கிறோம்” என்றார்.