பேளூர் சாலையோர ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்

80பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சிக்கு தமிழக அரசு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்ததில் சாலையை விரிவுபடுத்த 27.9.2024 தேதியில் இருந்து தொடர்ச்சியாக மூன்று நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 18.10.2024 சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற முற்பட்டபோது தொடர் மழையை காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றுவதை ஒத்தி வைத்தனர். 

இந்நிலையில் கடந்த வாரம் பேளூர் ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் 90க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 18) வருவாய்த்துறை, காவல்துறை ஒத்துழைப்போடு நெடுஞ்சாலை துறையினர் சாலை ஓர ஆக்கிரமிப்புகளில் இருந்த 200க்கும் மேற்பட்ட வீடு மற்றும் கடைகளை அகற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி