ஈரோடு கிழக்கில் இன்று (பிப்.05) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டார்கள் என பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என அப்பெண் கூறியுள்ளார். மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் கண்டிப்பாக புகார் செய்வேன் என அப்பெண் கூறியுள்ளார்.