ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடும் ஒன்றாகும். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், காலை முதலே பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஏற்காட்டில் உள்ள பூங்கா மற்றும் நீர் வீழ்ச்சிகளில், படகு சவாரி செய்து குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.