ரூ. 6 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

74பார்த்தது
ரூ. 6 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செய லாளருமான கண்ணன் தலைமையில் தேசிய வேளாண் மின் னணு சந்தை என்ற இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல். ஈரோடு, காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ. 63-க்கும், அதிகபட்சமாக ரூ. 82-க்கும் விற்பனையானது. மொத்தம் 7. 61 டன் அளவுள்ள 183 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ. 6 லட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற் பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி