சங்ககிரியில் சமரச தின வார விழா விழிப்புணர்வு பேரணி

54பார்த்தது
சங்ககிரியில் சமரச தின வார விழா விழிப்புணர்வு பேரணி
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்ட துணை சமரச தீர்வு மையத்தின் சார்பில் சமரச தின வாரவிழாவினையொட்டி விழிப்புணர்வு பேரணி சங்ககிரியில் நடைபெற்றது.

சமரச தீர்வு மையத்தினால் ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் நடைபெற்றவிழிப்புணர்வு பேரணிக்கு சங்ககிரி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான பன்னீர்செல்வம் தலைமை யில் பொதுமக்களிடத்தில் இது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி என். இனியா, சார்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞர் கிறிஸ்டோபர், சமரச மைய தீர்வாளர்கள் மணிசங்கர், செல்லப்பன், விஜயா, வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் உள்ளிட்ட பலரும்இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி