சங்ககிரி உதவி கலெக்டர் ஆபிசில் மக்கள் காத்திருப்பு போராட்டம்

54பார்த்தது
சங்ககிரி உதவி கலெக்டர் ஆபிசில் மக்கள் காத்திருப்பு போராட்டம்
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் பாறைவளவு அருந்ததியர் தெருவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதி மக்களுக்கு சாலை வசதி இல்லை. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாததால் அந்த பகுதி மக்கள் சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் உதவி கலெக்டர் லோகநாயகி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாலை வசதி செய்து தரப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி