தூய்மை பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைப்பினர்

60பார்த்தது
தூய்மை பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைப்பினர்
சேலம் மாவட்டம், சங்ககிரி வாசவி கிளப் சார்பில், ஆங்கில புத்தாண்டையொட்டி சங்ககிரி பேரூராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பசி பிணி அகற்றுதல் திட்டத்தின் கீழ் அரிசி வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளகாத்தில் நடைபெற்றது.

வாசவி கிளப்பின் பசி பிணி அகற்றுதல் திட்டத்தின் கீழ் 2024 ஆங்கில புத்தாண்டிலிருந்து அனைவரும் உணவு கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் சங்ககிரி வாசவி கிளப்பின் சார்பில் வாசவி கிளப் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பேரூராட்சித்தலைவர் மணிமொழிமுருகன் சங்ககிரி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பைகளை வழங்கி சிறப்பித்தார்.

அப்போது மண்டலத் தலைவர். ஆனந்த், முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர்கள் டி. விஸ்வநாதன், வசந்திமுரளிதரன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முருகன், பேரூராட்சி துப்பரவு மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி