சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

81பார்த்தது
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்மணி சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசிராமணி, தேவூர், வட்ராம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிராம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும் பத்தாண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாத அரசு திமுக அரசு என்று குற்றம் சாட்டினார்.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகளை அளித்து, அதிலும் குறிப்பாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற திமுக அரசு தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டுமே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி மக்களை ஏமாற்றியதாக கூறி இரட்டை இலை சின்னத்திற்கு சேகரித்தார்.
அப்போது சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், சேலம் புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஏ. பி. சிவக்குமாரன், உட்பட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெண்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி