தொட்டில் பெல்ட்டில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி

5567பார்த்தது
தொட்டில் பெல்ட்டில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பவர்லால். இவருடைய மனைவி மீனா. இவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 வயது பெண் குழந்தை மெகக். குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி தொட்டிலில் படுக்க வைத்து விட்டு மற்றொரு குழந்தையை குளியல் அறைக்கு அழைத்து சென்றார். அப்போது தொட்டிலில் இருந்து கீழே இறங்க முயன்ற குழந்தையின் கழுத்தில் பெல்ட் மாட்டி கொண்டது. இதில் மயங்கி விழுந்த குழந்தையை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை மெகக் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி