அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி

58பார்த்தது
அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி
சேலம் காசக்காரனூர் மனவளக்கலை மன்றம் ( ஸ்கை யோகா ) மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து நடத்திய யோகா பயிற்சி முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் காந்திமதி தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது. புதிய கல்லூரி சூழலில் தங்களை தயார் படுத்திக் கொள்ளவும் சிறந்த முறையில் தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலும் யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டன.

நோயற்ற வாழ்வு, எளிய முறை தியான பயிற்சி மற்றும் உடல்நலம் பேண உடற்பயிற்சி, ஞாபக சக்தி மற்றும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துதல், மனதை ஒருமுகப்படுத்தி கவனிக்கும் திறனை அதிகரிக்க செய்தல், வாழ்க்கையில் வெற்றி பெற ஆற்றலும் அமைதியும் கிடைக்க தியான பயிற்சி ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன. இந்த பயிற்சி முகாமை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் வசந்தி முனைவர் கீதாலட்சுமி மற்றும் முனைவர் பாண்டிக்கனி ஆகியோரின் ஒருங்கிணைப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்தி