சோனா கல்வி குழுமங்களின் தலைவர் வள்ளியப்பா சதாபிஷேக விழா

62பார்த்தது
சோனா கல்வி குழுமங்களின் தலைவர் வள்ளியப்பா சதாபிஷேக விழா
சேலம் சோனா கல்வி குழுமங்களின் தலைவர் வள்ளியப்பா சதாபிஷேகம் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. துணைத்தலைவர் சொக்கு வள்ளியப்பா வரவேற்றார். தொடர்ந்து வள்ளியப்பாவின் வாழ்க்கை பயணம் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது. பின்னர் பெங்களூரு கைலாசா ஆசிரமம் சமஸ்தான பீடாதிபதி ஜெயந்திர பூரி மகா சுவாமி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து வேரும் விழுதுகளும் என்ற தலைப்பில் வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தை அமைச்சர் கே. என். நேரு வெளியிட்டார். அதனை சென்னை டி. வி. எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், பண்ணாரி தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளர் பாலசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. , டி. எம். செல்வகணபதி எம். பி. , அருள் எம். எல். ஏ. , ரத்னா குழுமங்களின் நிறுவனர் பழனியப்பன், காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் தலைவர் லேனா நாராயணன், பக்த வரப்பிரசாத ஆஞ்சநேய கோவில் அறங்காவலர் நாகராஜன், டெசோல்வ் செமி கண்டக்டர் நிறுவன தலைவர் வீரப்பன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சதாபிஷேக விழா கண்ட வள்ளியப்பாவை வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி