விடுபட்ட அலுவலா்கள், பணியாளர்கள் தபால் ஓட்டு போட்டனர்

60பார்த்தது
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து துறைகளை சேர்ந்த பல்வேறு நிலையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சி நடைபெற்ற மையங்களில் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்த வழிவகை செய்யப்பட்டு இருந்தது.
இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும், சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகளில் தபால் வாக்குகள் செலுத்தினர். இதனிடையே தபால் ஓட்டை செலுத்தாத தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தங்களது ஓட்டை செலுத்தும் வகையில் நேற்று சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டது.
இந்த வாக்குச்சாவடி மையத்தில் இதுவரை தபால் ஓட்டுப்பதிவு செய்யாத தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் வரிசையில் நின்று தபால் ஓட்டுப்போட்டனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் தபால் ஓட்டுகளை இதுவரை செலுத்தாமல், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் குகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப்போட்டனர். வாக்குப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி