அழகாபுரம் ஹோலிஏஞ்சல் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

50பார்த்தது
அழகாபுரம் ஹோலிஏஞ்சல் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
சேலம் அழகாபுரம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 57-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஷெர்லி செபாஸ்டியன் ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுஜிதா தலைமை தாங்கினார். விழாவில் முதன்மை சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் குடிமையியல் நீதிபதி எம். ரம்யா, சேலம் கோட்ட வணிக ஆய்வாளர் டி. சதீஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு என். எஸ். எஸ். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து சமாதான புறாக்களை பறக்க விட்டனர். இதில் மாணவிகளுக்கு 100. மீட்டர், 200 மீட்டர் தொடர் ஓட்டம், கராத்தே, ஜிம்னாஸ்டிக், பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் நீதிபதி ரம்யா, ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் சான்றிதழ்கள், கேடயங்கள், பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மாணவிகளின் கண் கவரும் நடனம், நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி