சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி

64பார்த்தது
சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி
சேலம் கிச்சிப்பாளையம் அறிஞர் அண்ணா தெருவில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். நெத்தி மேட்டில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக கடந்த 7-ந் தேதி நள்ளிரவு லைன்மேடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பில் அவர் சென்ற போது, தாதகாப்பட்டியில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சுரேஷின் மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி