காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்

63பார்த்தது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்திஜெயந்தியான இன்று கிராம சபைகூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், இணையவழி வரி செலுத்துதல் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதிதிட்டம், ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி