தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் தூய்மை பிரசார நிகழ்ச்சி

84பார்த்தது
தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் தூய்மை பிரசார நிகழ்ச்சி
மத்திய அரசின் ஸ்வச்சதா-ஹி-சேவா மற்றும் ஸ்வச்சதா 4. 0 என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு கிராம வங்கியின் சேலத்தில் உள்ள தலைமை அலுவலகம் மூலம் நடை பயண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அஸ்தம்பட்டி அருகே உள்ள தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை வங்கியின் தலைவர் மணி சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த நடை பயண நிகழ்ச்சி அஸ்தம்பட்டி, காந்தி ரோடு ஆகிய பகுதிகள் வழியாக சென்றது. அப்போது தூய்மையை பேணுவதின் முக்கியவத்தை விளக்கும் வகையில் பதாகைகள் ஏந்தி செல்லப்பட்டன. இதில் பொது மேலாளர்கள் குமார், வாசுதேவன், மற்றும் 100 பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் ஆகியவற்றை வங்கியின் தலைவர் மணி சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாம் மணிபால் மருத்துவமனை மற்றும் கண் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்கள் உள்பட 200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 75 தூய்மை பணியாளர்களுக்கு மேலங்கி உடைகள் மற்றும் கையுறைகளையும் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி