எடப்பாடி: 17-ந்தேதி பழனிசாமிக்கு பாராட்டு விழா

51பார்த்தது
எடப்பாடி:  17-ந்தேதி பழனிசாமிக்கு பாராட்டு விழா
சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மேட்டூர் காவிரி உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா வருகிற 17-ந் தேதி மேட்டூர் அணை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி உபரிநீர் வந்து சேரும் மேச்சேரி எம். காளிப்பட்டி ஏரியின் அருகில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். பாராட்டு விழா நடைபெறும் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் மேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடத்தை சேலம் புறநகர் மாவட்ட அ. தி. மு. க. செயலாளர் இளங்கோவன் பார்வையிட்டார். பின்னர் விவசாய சங்க நிர்வாகிகள், கட்சியினருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதில் சந்திரசேகர் எம். பி. , ஓமலூர் எம். எல். ஏ. மணி, மாநில பொறுப்பாளர்கள் கலையரசன், எமரால்டு வெங்கடாசலம், விக்னேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி