மேட்டூர் அணையில் 3. 10 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.

66பார்த்தது
மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76. 73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்கபடுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உரிமம் பெற்ற மீனவர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று அணையின் நீர்த்தேக்க  பகுதியான மாசிலாப் பாளையம் காவிரியாற்றில் மீன்வளத்துறை சார்பில் 3. 10 லட்சம் மீன் குஞ்சுகள் இன்று  விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை தர்மபுரி மண்டல துணை இயக்குனர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் உமா கலைசெல்வி, ஆய்வாளர்கள் தேவதர்ஷினி, கவிதா, சார் ஆய்வாளர்கள் பாலதண்டாயுதம், சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி