நாவலூரில் சமையல்கேஸ் சிலிண்டர் வெடித்து மூன்று பேர்படுகாயம்

69பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லிஅருகே நாவலூர் மேற்குகாடு பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் கவிதா தம்பதியர் தனது கணவருடன் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் கவிதாவின் தாய் காந்தியம்மாள் தனது மகள் கவிதாவின் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கேஸ் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு திடீரென கேஸ் சிலிண்டரில் தீ பற்றியது சுதாரித்துக் கொண்ட காந்தியம்மாள் அவரது பேரன் ஆகிய இருவரும் வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். எரிந்த கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்து முழுவதும் எரிந்துகொண்டிருந்த நிலையில் மேலும் வீட்டில் இருந்த மற்றொரு கேஸ் சிலிண்டரும் வெடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இந்த நிலையில் அங்கு அருகில் இருந்த தமிழ்ச்செல்வன் ( 40 ) சிரஞ்சீவி (67) சக்திவேல்( 45 ) ஆகிய மூன்று பேரும் தீ அணைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூன்று பேரும்சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த விபத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி