சேலம், ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவிலில் ஆடி பண்டிகை முன்னிட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுகொத்தாம்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து படையலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.