சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில்
அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளரும், வீரபாண்டி ஒன்றிய குழு துணை தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் இளம்பிள்ளை பேரூராட்சி கவுன்சிலரும், பேரூர் கழக பொறுப்பு செயலாளருமான கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் , கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலாளரும் , வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் வருதராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் அரியானூர் பழனிசாமி, இளம்பிள்ளை பேரூர் செயலாளர் துளசிராஜன் , அவை தலைவர் வரதராஜன், பேரூர் துணை செயலாளர்கள் சேட்டு நடராஜ், சாந்தி, இனண செயலாளர் மல்லிகா பழனிச்சாமி, கவுன்சிலர் விக்னேஷ் , எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் வினோத், ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் தினேஷ் பாலாஜி , ராக்கிபட்டி கிருஷ்ணன் , பழனிச்சாமி , செல்லாண்டி, கோவிந்தன், மாதேஷ், சரவணன், தமிழரசன், சித்துராஜ் மற்றும் வார்டு செயலாளர்கள், சார்பு அணியினர் , கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.