தவெக
விஜய் வெளியிட்ட அறிக்கையில், “மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். அண்ணா, ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டினார். தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை வரலாற்று நினைவுகளுடன், தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.