நஞ்சுண்டேஸ்வரர்தேர் திருவிழா நாளை கொடியேற்றத்தோடு துவக்கம்

53பார்த்தது
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற தேவகிரி அம்மன் உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்வந்து வழிபட்டு செல்கின்றனர். நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27ஆம் தேதி நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டு சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதிதிங்கட்கிழமை எடப்பாடி பெரிய மாரியம்மன் சுவாமி திருவீதி உலாநிறைவுற்று இரவு 9 மணி அளவில் விக்னேஸ்வரர் பூசை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 10 மணி அளவில் கவர நாயுடு மகாஜனங்கள்சார்பில் கொடி அழைத்து வந்து ஏப்ரல் 16ஆம் தேதி அதிகாலை 4. 50 மணியளவில் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டு சித்திரை தேர் திருவிழா துவங்குகிறது. தேர் திருவிழா ஏற்பாடுகளைஇந்துசமய அறநிலையதுறை அதிகாரிகள், திருவிழாகுழுவினர், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி