சேலம் கொங்கணாபுரத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

54பார்த்தது
சேலம் கொங்கணாபுரத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 3 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்த பருத்தி மூட்டைகள் 450 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி. டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 6 ஆயிரத்து 700 முதல் ரூ. 7 ஆயிரத்து 800 வரை விற்பனையானது. இதேபோல் கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 4, 300 முதல் ரூ. 5, 150 வரை விலை போனது. மொத்தம் ரூ. 75 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. இச்சங்கத்தில் பருத்திக்கான அடுத்த பொது ஏலம் வருகிற 31-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி