ஆந்த்ராக்ஸ் நோயால் மாடுகள் இறப்பு

4217பார்த்தது
ஆந்த்ராக்ஸ் நோயால் மாடுகள் இறப்பு
ஆந்த்ராக்ஸ்' நோயால், மாடுகள் அதிகளவில் இறப்பதால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

தலைவாசல் சுற்றுவட்டாரங்களில், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவை பிரதான தொழிலாக உள்ளது. கொரோனாவால், சந்தைகள் மூடலால், கால்நடைகளை விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுவாச்சூர், வரகூர், வேப்பநத்தம், ஊனத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், 'ஆந்த்ராக்ஸ்' நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டு இறப்பது அதிகரித்துள்ளது. கடந்த, 10 நாளில், 20க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. இதுகுறித்து, அரசு கால்நடை மருத்துவர் விஸ்வநாதன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி உள்ளிட்டோர், நேற்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, விஸ்வநாதன் கூறியதாவது: இந்நோய், தமிழில், 'அடைப்பான்' என அழைக்கப்படுகிறது. பாக்டீரியா கிருமியால் உருவாகும் நோய், மிதமான, தீவிர என, இரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, தீவிர வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், கால்நடைகள் குறுகிய காலத்தில் இறக்கின்றன. இதற்கான தடுப்பூசி, கால்நடைத்துறை மூலம் போடப்படுகிறது. காய்ச்சல், பால் சுரக்காதது, நிற்க முடியாமல் படுத்துக்கொள்ளுதல், உணவு எடுத்துக்கொள்ளாதது உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறி. ஆரம்ப காலத்தில், நோயின் அறிகுறியை கவனித்து சிகிச்சை அளித்தால், இறப்பை தவிர்க்கலாம். இதுகுறித்து, கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி