தளவாய்பட்டி லாரி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து

58பார்த்தது
கோவை பகுதியில் இருந்து தனியார் நிறுவனத்தின் பார்சல் லாரி பார்சலை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக திண்டிவனம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் நீதிபதி வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்
இந்நிலையில் இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தளவாய்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பார்சல் லாரி சாலையின் சிறிய பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுனர் நீதிபதி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் உடனடியாக அவளியாகச் சென்ற நபர்கள் ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி