“தமிழ்ப் புதல்வன்" திட்டம்

85பார்த்தது
“தமிழ்ப் புதல்வன்" திட்டம்
சேலம் மாவட்டத்தில் "தமிழ்ப் புதல்வன்” திட்டம் செயல்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஜூலை 26) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகளை இத்திட்டத்தில் சேர்த்து பயன்பெற வழிவகை செய்திடும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நீர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உடன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி இரா. சுகந்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி