ஆத்தூரில்விசிகவினர்மீது நடவடிக்கைஎடுக்கபாமக டிஎஸ்பியிடம் மனு

81பார்த்தது
புவனகிரியில் நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்கள் குறித்தும், வன்னியர் சங்கத் தலைவர் குறித்தும், தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய விசிகவினர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியில் சேலம் மாவட்ட சேலம் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் முன்பு பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டனர். காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்னர் பாமகவினர் போராட்டம் கைவிட்டு காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு அணைவரும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி